ஒரே நாளில் 1,900 விமானங்கள் ரத்து: பனிப்புயலில் சுமூகம் கெடும் அமெரிக்கர்கள்!

பனிப்பொழிவின் மத்தியில் விமானம்
பனிப்பொழிவின் மத்தியில் விமானம்

பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் குலைந்து வருகின்றனர். அதிகரிக்கும் பனிப்புயல் காரணமாக ஆகாய மார்க்கம் ரத்துக்கு ஆளாக, சாலைப் போக்குவரத்து விபத்துகளை சம்பாதித்து வருகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கடும் பனிப் பொழிவின் மத்தியிலே வட அமெரிக்கர்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பல அடிகள் உயரத்துக்கு பனிப்பொழிவு சாலைகளை ஆக்கிரமித்ததும், பனிப்புயல் நீடித்ததில் விமானங்கள் ரத்தானதும் பொதுஜனத்தின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது.

பனிப்புயல் காரணமாக இன்று(பிப்.1) ஒரு நாளில் மட்டும், 1,897 விமானங்கள் ரத்தாகி உள்ளன. இந்தப் போக்கு தொடர வாய்ப்புள்ளதால் அமெரிக்கர்களின் ஆகாய மார்க்கம் கேள்விக்குறியாகி உள்ளது. மாற்றுப் போக்குவரத்தாக சாலையை நம்பியும் பயணப்பட வாய்ப்பின்றி கடும் பனிப்பொழிவு அச்சுறுத்தி வருகிறது. சாலை நெடுகிலும் படர்ந்திருக்கும் பனிப்பாளங்கள், வாகனங்களை பொம்மைகளைப் போல விபத்துக்குள்ளாக்கி வருகின்றன.

ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சில மாகாணங்களில் அலைக்கழித்த கனமழைக்கு உயிர்ப்பலிகள் அதிகரித்ததும், அதைத் தொடரும் பனிப்புயலுமாக அமெரிக்கர்கள் சுமூகம் கெட்டிருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in