விடிய விடிய பெய்த கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 3 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை!

விடிய விடிய பெய்த கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 3 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை!

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இன்றும் மழை தொடர்வதால் ஒன்பது மாவட்டங்களில் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தொடங்கிய மழை நேற்று முழுவதும் பெய்து இன்றும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி இன்று சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

மொத்தத்தில் சென்னை,  திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில்  சென்னை,  திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று  மாவட்டங்களில் பள்ளிகளுடன் சேர்த்து கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, தென்காசி  உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in