கனமழையால் பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை!

கனமழையால் பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை!

மேன்டூஸ் புயல் கரையேறி விட்டாலும் தமிழகத்தில் கனமழை தொடர்ந்து அடை மழையாக பெய்து வருவதால் இன்று  ஐந்து மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கேரளா மற்றும்  அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. 

அதன்படி நேற்று முதலே  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி  ஆகிய ஐந்து  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர் மழையால் தொடர் விடுமுறையும் வாடிக்கையாகியிருக்கிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in