இன்றும் பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு: டெல்டாவில் தொடரும் கனமழை

டெல்டாவில் தொடரும் மழை
டெல்டாவில் தொடரும் மழைடெல்டா மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் நேற்று முன் தினம் தொடங்கி இன்று வரையிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிகக்  கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து இன்றும் மழை தொடர்வதாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொடரும் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in