பிறந்த நாள் பார்ட்டியில் தலைக்கேறிய போதை: இளம்பெண்ணை தூக்கிச்சென்று இளைஞர்கள் செய்த கொடூரம்

பிறந்த நாள் பார்ட்டியில் தலைக்கேறிய போதை: இளம்பெண்ணை தூக்கிச்சென்று  இளைஞர்கள் செய்த கொடூரம்

ஒடிசாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது போதையில் கத்திக் கூச்சலிட்டவர்களைக் கண்டித்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று மூன்று இளைஞர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மஞ்சேஸ்வரைச் சேர்ந்த இளம்பெண் போலீஸில் புகார் அளித்தார். அதில்," என் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மஞ்ச் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அவரும், அவரது நண்பர்களான சுரேஷ், கோபி போதையில் கத்திக்கூச்சலிட்டனர். இதனால் சத்தம் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மூவரும், என்னை வீட்டிற்குள் தூக்கிச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். எனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என்று மூவரும் மிரட்டி விட்டுச் சென்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மஞ்ச் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார். நேற்று அவர்களைக் கைத செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in