குடிபோதையில் 2-வது கணவருடன் சேர்ந்து குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: சென்னையில் பதற வைக்கும் சம்பவம்

குடிபோதையில் 2-வது கணவருடன் சேர்ந்து குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: சென்னையில் பதற வைக்கும் சம்பவம்

சென்னையில் இரண்டாவது கணவருடன் சேர்ந்து குடிபோதையில் தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து தாய் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாஸ்திரிநகர் 7வது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. இவரது மகள் பானு(28). இவருக்கும், விமல்ராஜ் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பானுவுக்கும், அவரது கணவர் விமல்ராஜுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் ஜெகன் என்பவரை பானு கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின் பானு தனது குழந்தையுடன் ஜெகன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், பானு தனது தாய் கன்னியம்மாவுக்கு போன் செய்து குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார்.

இதனால் கன்னியம்மா நேரில் சென்று குழந்தையைப் பார்த்த போது குழந்தையின் முகத்தில் சிராய்ப்பு காயம்,முகத்தில் சூடு வைத்து காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் , கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகள் பானு தனது 2வது கணவர் ஜெகனுடன் சேர்ந்து குடிபோதையில் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அடித்து ,சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் குழந்தையின் தாய் பானு, அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தனது 2வது கணவருடன் சேர்ந்து அடித்து சிகரெட் நெருப்பால் தாய் சுட்டுக் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in