கல்லூரி வகுப்பறையில் போதையில் குத்தாட்டம் போட்ட பேராசிரியர் :அதிரடி காட்டிய கல்வித்துறை

கல்லூரி வகுப்பறையில் போதையில் குத்தாட்டம் போட்ட பேராசிரியர் :அதிரடி காட்டிய கல்வித்துறை

பஞ்சாப்பில் கல்லூரி வகுப்பறையில் மாணவர்கள் முன் மதுபோதையில் நடனமாடிய பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி உள்ளது. இங்கு ரவீந்தர் குமார் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் குடிபோதையில் வகுப்பறைக்கு வந்துள்ளார். அத்துடன் மாணவர்கள் முன்பு பாட்டியில் இருந்த மதுவைக் குடித்தபடி பஞ்சாபி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சொந்தப் பணத்தில் மது அருந்துவதாகவும், தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் பேராசிரியர் கூறுகிறார், இந்த வீடியோ வெளியானதையடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உள்ளது. ஆனால் பேராசிரியர் தான் குடிபோதையில் எதையும் செய்யவில்லை என்றும் வேடிக்கைக்காக செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in