போதையில் பெயின்டரை குத்திக்கொன்ற நண்பன்: டாஸ்மாக் பாரில் நடந்த பயங்கரம்

போதையில் பெயின்டரை குத்திக்கொன்ற நண்பன்: டாஸ்மாக் பாரில் நடந்த பயங்கரம்

ஊரப்பாக்கம் டாஸ்மாக் பாரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து 200 மீட்டர் அருகில் ஊரப்பாக்கம் சுடுகாடு எதிரே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடை பாரில் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த பெயின்டர் பாலாஜி என்ற மாங்கா பாலாஜி(24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் நந்தகோபால்(23) ஆகிய இருவரும் நேற்று இரவு மது அருந்தினர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.

இதில் போதை தலைக்கேறியதில் ஆத்திரமடைந்த நந்தகோபால் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து டாஸ்மாக் பாரில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். அங்கிருந்த பாலாஜியின் நண்பர்கள் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தது கூடுவாஞ்சேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் பதுங்கி இருந்த நந்தகோபாலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளி நந்தகோபால் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in