குடிபோதையில் தினமும் டார்ச்சர்: ஆத்திரத்தில் தந்தையைக் கொன்று 30 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய மகன்

குடிபோதையில் தினமும் டார்ச்சர்:  ஆத்திரத்தில் தந்தையைக் கொன்று 30 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய மகன்

கர்நாடகாவில் தந்தையை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்து அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் நகரைச் சேர்ந்தவர் பரசுராம் குலாலி(53). இவரது மகன் வித்தலா(20). பரசுராம் தினமும் குடித்து விட்டு வந்து குலாலியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் இரும்புக்கம்பியால் தனது தந்தையை வித்தலா தாக்கினார். இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளார்.

இந்த நிலையில், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து தகவல் அறிந்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து சென்று பரசுராம் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது மகன் வித்தலாவை பிடித்து விசாரித்த போது தனது தந்தையை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " பரசுராம் குடித்து விட்டு அடிக்கடி மகனிடம் சண்டையிட்டுள்ளார். டிச.6-ம் தேதி நடந்த தகராறில் வித்தலா கம்பியால் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை 30 துண்டுகளாக்கி அவர்களுக்குச் சொந்த பண்ணையில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளார். வித்தலாவை கைது செய்து விசாரித்து வருகிறோம்" என்றனர். பெற்ற தந்தையை மகனே அடித்துக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in