இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து: காவல் நிலையத்தில் மது அருந்திய போலீஸ்காரர்கள்

இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து: காவல் நிலையத்தில் மது அருந்திய போலீஸ்காரர்கள்

கர்நாடகாவில் காவல் நிலையத்தில் சீருடையுடன் போலீஸ்காரர்கள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், கவுனிப்பள்ளி காவல்நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் போலீஸ்காரர்கள் சலபதி, அஞ்சி மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் காவல் நிலையத்தில் சீருடையுடன் மது அருந்தியுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த வீடியோ குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in