போதையில் அசந்து தூங்கிய டிரைவர்; அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற நடத்துநர்: அலறித்துடித்த பயணிகள்

போதையில் அசந்து தூங்கிய டிரைவர்; அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற நடத்துநர்: அலறித்துடித்த பயணிகள்

போதையில் ஓட்டுநர் தூங்கியதால் நடத்துநர் அரசு பேருந்தை ஓட்டினார். இதனால் பயந்து போன பயணிகள் பேருந்தை நிறுத்தி பிரச்சினை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்து நேற்று இயக்கப்பட்டது. அந்த பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து 46 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தவாசிக்கு நள்ளிரவில் சென்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது வளைவுகளில் விபத்தை ஏற்படுத்துவது போல பேருந்து இயக்கப்பட்டதால் பயணிகள் அலறித் துடித்தனர்.

இதனால் நள்ளிரவு 1.50 மணிக்கு வந்தவாசி கோட்டை மூலை வந்த போது பேருந்தை நிறுத்தச் சொல்லி பயணிகள் சத்தம் போட்டனர். பேருந்தில் ஓட்டுநர் தரனேந்திரன் குடிபோதையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவருக்குப் பதில் நடத்துநரே பேருந்தை இயக்கியது தெரிய வந்தது. இதனால் பேருந்தில் இருந்த ஓட்டுநரை பயணிகள் தாக்கினர். அத்துடன் இதற்கு மேல் அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாது. வேறு பஸ்சில் செல்கிறோம் எனக்கூறி பயணிகள் அனைவரும் கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸாார், சம்பவ இடத்திற்கு விரைந்து வேறு பேருந்தில் பயணிகளை ஏற்றி விட்டனர்.

இந்த நிலையில், பேருந்து ஓட்டுநரை பயணிகள் தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்திய போக்குவரத்து கழக அதிகாரிகள் போதையில் இருந்த பேருந்து ஓட்டுநர் தரனேந்திரன், பேருந்தை இயக்கிய நடத்துநர் ஹோலிஃபேஸ் ஆகியோரை இன்று சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in