தமிழக கடல் வழியாக கடத்திய போதை மாத்திரைகள் இலங்கையில் பறிமுதல்!

 போதை மாத்திரைகள்
போதை மாத்திரைகள்இலங்கையில் பறிமுதல்

தமிழக கடல் வழியாக கடத்திச் சென்ற போதை மாத்திரைகளை இலங்கை புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து, யாழ்ப்பாணம் வாலிபரை கைது செய்தனர்.

தமிழக கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் நெல்லியடி சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நெல்லியடி போலீஸார் அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு தலா 10 மாத்திரைகள் வீதம் 500 மாத்திரைகள் கொண்ட அட்டை பெட்டி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீஸார் கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், தமிழக கடல் வழியாக கடத்தல் கும்பல் மூலம் கடத்தி வந்தது எனவும், இலங்கையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு மாத்திரை 250 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

தமிழகத்தில் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் இம்மாத்திரைகளை இலங்கை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளாக விற்கப்பட்டு வந்ததும் தெரிந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in