சொகுசு வாழ்க்கை ஆசை; போதைக்கு அடிமைப்படுத்தி பாலியல் தொழில்: கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 14,190 பெண்கள்

சொகுசு வாழ்க்கை ஆசை; போதைக்கு அடிமைப்படுத்தி பாலியல் தொழில்: கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 14,190 பெண்கள்

போதைப் பொருள்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஹைதராபாத் காவல் துறையிடம் சிக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து 14,190 பெண்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் போதை மற்றும் பாலியல் தொழில்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருள்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் தொழில் செய்து வருகிறது. இவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக துறைமுகம் வழியாக போதை பொருள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக குஜராத், மும்பை போன்ற துறைமுகங்களில் இருந்து தான் பல கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் போதை பொருளை ஒழிக்க தனி பிரிவையை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இதற்கென்று தனிப்பிரிவு செயல்பட்டு வருவதோடு, போதை கடத்தல் கும்பலை களையெடுத்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், சைபராபாத்தில் பாலியல் தொழில் மற்றும் ஆள் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, பெண்களுக்கு சொகுசு வாழ்க்கையை ஆசைகாட்டி அவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது இந்த கும்பல்.

இந்த கும்பலைச் சேர்ந்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து அப்போது வரும் அழைப்புகளுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்களை அனுப்பி வைத்துள்ளது. அதில் கிடைக்கும் பணத்தில் 30 சதவீதம் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பெண்களுக்கு கொடுத்து வந்துள்ளது இந்த கும்பல். வெளிமாநிலம், வெளிநாட்டு பெண்கள் என சுமார் 14,190 பெண்கள் இந்த கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in