ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய 1,655 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: நெல்லை காவல்துறை ஆணையர் அதிரடி

காவலர் சோதனை
காவலர் சோதனை கோப்புப் படம்

திருநெல்வேலியில் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 1,655 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி காவல் ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் அண்மையில் பதவி ஏற்றார். இவர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு அங்கமாக இன்று தடாலடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலியில் கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் பொருள்களுக்குப் பதிலாக நபர்களை ஏற்றிச் செல்வது, அதிக சுமைகளை ஏற்றி வருவது ஆகிய குற்றங்களைச் செய்த நபர்கள் மீது 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் லைசென்ஸை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்குப் பரிந்துரைத்தேன். அதன் பேரில் ரத்தும் செய்யப்பட்டது.

இதேபோல் இந்த 2023-ம் ஆண்டில் இதுவரை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. டூவீலர்களில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டிய 1,655 பேரின் லைசென்ஸை ரத்து செய்யவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளோம்' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in