மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; சுற்றிவளைத்தது சென்னை போலீஸ்; 40 கிலோவுடன் ஆட்டோ டிரைவர் சிக்கினார்

கஞ்சா
கஞ்சாமாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; சுற்றிவளைத்தது சென்னை போலீஸ்; 40 கிலோவுடன் ஆட்டோ டிரைவர் சிக்கினார்

சென்னை பட்டினம்பாக்கத்தில் ஆட்டோவில் 40 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நெற்குன்றம் மாதா தெருவை சேர்ந்தவர் செல்வம்(55). ஆட்டோ ஓட்டுநரான இவர், பட்டினம்பாக்கம் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ரகசியமாக செல்வத்தை போலீஸார் கண்காணித்துள்ளனர்.

இன்று காலை செல்வம் பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த போது பட்டினம்பாக்கம் போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவையும், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் செல்வத்தை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து விசாரணையில் பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்வத்துடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in