கணவர் வெளியூர் செல்லும்போது ஆண் நண்பருடன் மனைவி தனிமை: தட்டிக்கேட்டபோது நடந்த கொலை

கொலை செய்யப்பட்ட சங்கர். கைதான வீரபுத்திரன்
கொலை செய்யப்பட்ட சங்கர். கைதான வீரபுத்திரன்

மனைவியின் தவறான பழக்கத்தால் கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கால் டாக்சி ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மலையடிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் என்ற வேல்துரை(33). இவர் தனது மனைவி கோமதி உடன் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதிக்கும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் வீரபுத்திரன்(37) என்பவருக்கும் இடையே தவறான நட்பு இருந்து வந்துள்ளது. கோமதி தனது கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வீரபுத்திரனை வரவழைத்து தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் கோமதியின் தவறான பழக்கம் அவரது கணவருக்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார்.

இதனால், வீரபுத்திரனுடான உறவை துண்டித்துக்கொண்டார் கோமதி. இதனால் ஆத்திரமடைந்த வீரபுத்திரன் கோமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஊரில் இருந்து வந்த வீரபுத்திரன், கோமதி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து கோமதியின் கணவர் சங்கருக்கும், வீரபுத்திரனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரபுத்திரன் கத்தியால் சங்கரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த வடமாநில வாலிபர்கள் வீரபுத்திரனை பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு சென்ற கிண்டி போலீஸார் சங்கர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வீரபுத்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in