குறுகிய தூர `பிரளயம்’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ சாதனை

பிரளயம் சோதனை வெற்றி
பிரளயம் சோதனை வெற்றி

நிலத்தில் இருந்து நிலத்திற்கு பாய்ந்து இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் குறுகிய தூர ‘பிரளயம்’ ஏவுகணை சோதனையை, டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

நிலத்தில் இருந்து நிலத்திற்கு பாய்ந்து, இலக்குகளை தாக்கி அழிக்கும், ‘பிரளயம்’ என்று பெயரிடப்பட்டுள்ள குறுகிய தூர ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைக்கோடுகளின் அருகே இந்த ஏவுகணைகளை நிலைநிறுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று காலை 9.50 மணியளவில், ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவின் சோதனை மையத்தில் இருந்து ஏவுகணையை டிஆர்டிஓ சோதனை செய்தது. அப்போது திட்டமிட்ட இலக்கை துல்லியமாக ஏவுகணை தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக இலக்கை தாக்கியதாக டிஆர்டிஓ அறிவிப்பு
துல்லியமாக இலக்கை தாக்கியதாக டிஆர்டிஓ அறிவிப்பு

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரளயம் ஏவுகணை 350 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கவல்லது. 500 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான எடையை தாங்கிச் செல்லக்கூடியது. இந்த ஏவுகணை, இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடுவானில் கடந்த பிறகு, தனது பாதையை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது” என்றார்.

 ‘பிரளயம்’ ஏவுகணை
‘பிரளயம்’ ஏவுகணை

இந்தியாவின் ’பிரளயம்’ ஏவுகணை, சீன ராணுவத்தின் வசம் இருக்கும், ‘டாங் பெங் 12’ மற்றும் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தி வரும், ‘ஸ்காண்டர்’ ஏவுகணை ஆகியவற்றுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in