களமிறங்கும் 2 ரோபாட்டுகள்... உத்தராகண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணியில் டிஆர்டிஓ

மீட்டுப்பணி நடைபெறும் சுரங்கப்பாதையின் முகப்பு
மீட்டுப்பணி நடைபெறும் சுரங்கப்பாதையின் முகப்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியிருக்கும் 21 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இணைந்திருக்கும் டிஆர்டிஓ சார்பில், 2 பிரத்யேக ரோபாட்டுகள் களமிறக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில், சுரங்கப்பாதை ஒன்றின் கட்டுமானப் பணியின்போது நவ.12 அன்று அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக தொடரும் மீட்புப் பணிகள், அன்றாடம் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகின்றன.

உத்தராகண்ட் சுரங்கத்தில் மீட்பு பணிகள்
உத்தராகண்ட் சுரங்கத்தில் மீட்பு பணிகள்

சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன், உணவு, நீர், மருந்துகள், உளவியல் மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவை பிரத்யேகமாய் துளையிடப்பட்ட குழாய்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் உட்பட ஐந்துக்கும் மேலான முகமைகள் இந்த மீட்பு போராட்டதில் கைகோர்த்துள்ளன. இவர்களுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-ம் இணைந்துள்ளது. 20 கிலோ மற்றும் 50 கிலோ எடையுள்ள 2 ரோபோக்களை டிஆர்டிஓ களமிறக்குகிறது. இவை எந்தளவுக்கு மீட்பு பணியில் உதவக்கூடும் என்ற கேள்விகளுக்கு மத்தியில், இந்த ரோபாட்டுகள் களமிறங்குகின்றன.

  டிஆர்டிஓ ரோபாட்
டிஆர்டிஓ ரோபாட்

தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் சுரங்கப்பாதையின் இடிபாடுப் பகுதியை அடைய பல்வேறு திசைகளில் துளையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மிகப்பெரும் துளையிடும் எந்திரங்களும் அங்கே விரைந்துள்ளன. அவற்றின் எடை காரணமாக, அவற்றை விமானத்தில் எடுத்துச்செல்ல முடியாது. எனவே. உரிய சாலை வசதிகள் அற்ற வனாந்திரப் பகுதிக்கு கனரக துளையிடும் நவீன எந்திரங்கள் பெரும் சவாலுக்கு இடையே அங்கே கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றின் மத்தியில்தான், ரோபாட்டுகளும் மீட்புப் பணியில் இணைந்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in