3 மாத கருவைக் கலைக்க நாடகம் ஆடுகிறார்: சீரியல் நடிகை திவ்யா மீது கணவர் பரபரப்பு புகார்

3 மாத கருவைக் கலைக்க நாடகம் ஆடுகிறார்: சீரியல் நடிகை திவ்யா மீது கணவர் பரபரப்பு புகார்

மூன்று மாதக்கருவைக் கலைக்க நடிகை திவ்யா முயற்சி செய்வதாக அவரது கணவர் நடிகர் அர்னவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுததியுள்ளது.

கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பெங்களூருச் சேர்ந்த இவர் சன்டிவியில் ஒளிபரப்பான ' கேளடி கண்மணி ' சீரியலில் நடிக்க ஆரம்பித்து 'மகராசி போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். ஏற்கெனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவரை விட்டுப் பிரிந்து சென்னை புரசைவாக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த சீரியல் நடிகர் அர்னவ் என்ற நைனா முகமத். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். . இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே பல ஆண்டகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மதம் மாறினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திவ்யாவிடம் அர்னவ் தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த பிப்ரவரி மாதம் திவ்யா மதம் மாறியுள்ளார். இதையடுத்து இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு சீரியல் நடிகையுடன் அர்னவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை ஊர் அறிய திருமணம் செய்ய வேண்டும் என்று அர்னவிடம் திவ்யா வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சசிநாதர் கோயிலில் மூன்று மாதங்களுக்கு முன் இந்து முறைப்படி நண்பர்கள் முன்னிலையில் திவ்யாவை ஆர்னவ் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவ்யா கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவரை விட்டு அர்னவ் பிரிந்து சென்றுள்ளார்.

கர்ப்பிணியான நடிகை திவ்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது சேர்ந்துள்ளார். அவர் கதறி அழுதுகொண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்," தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் தனது கருக்கலையும் நிலை உள்ளதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டினார். மருத்துவமனை நிர்வாகல் அளித்த தகவலின் பேரில் திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யபட்டுள்ளது.

ஆனால், நடிகை திவ்யாவின் குற்றச்சாட்டுக்களை அவரது கணவர் அர்னவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன் மனைவி மூன்று மாதக் கருவைக் கலைக்க நாடகம் ஆடுவதாகக் கூறியுள்ளார். தனது மனைவியின் நண்பர் ஈஸ்வர் என்பவரின் துணையுடன் இவ்வாறு அவர் நடந்து கொள்வதாகவும், தன் மனைவியை தான் தாக்கவில்லை என்ற போதும், அவர் கூறும் நேரத்தில் தான் வீட்டில் இல்லயென்றும், அதற்கான ஆதாரம் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இருப்பதாகவும் அர்னவ் கூறினார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in