செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று திறக்கப்படுகிறது: கரையோர மக்களுக்கு அலர்ட்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று திறக்கப்படுகிறது: கரையோர மக்களுக்கு அலர்ட்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாகப் புழல் ஏரியும், செம்பரம்பாக்கம் ஏரியும் இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக அந்த ஏரிகள் நிரம்பி வழிவதால் இன்று மதியம் தண்ணீர் திறந்து விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த இருதினங்களாகத் தொடர் மழை காரணமாகப் புழல் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து  அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2000 கன அடி அளவிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து புழல் ஏரியிலிருந்து இன்று மதியம் 3 மணிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட இருப்பதாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதுபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியும் கனமழைக்கு நிரம்பியுள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1180 கன அடி அளவிற்கு நீர்வரத்து உள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் மதியம் 3 மணி அளவில் 100 கன அடி அளவிற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மழையின் அளவு அதிகரிக்கும் என்பதால் படிப்படியாக வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in