உயர்கல்வி தொடராத 8,588 மாணவர்களின் விவரங்களை உடனே அனுப்பவும்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

உயர்கல்வி தொடராத 8,588 மாணவர்களின் விவரங்களை உடனே அனுப்பவும்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

12-ம் வகுப்பு முடித்த 8,588 மாணவர்கள் எவ்வித உயர் கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "2021-22-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் உயர்கல்வியை தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடராத மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதனைக் களைந்து, அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திடத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

26.08.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர் கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்திலிருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் தொடர்பு எண், கல்வி மாவட்டம் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களைப் பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது. எனவே, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களைப் பெற்று உரியப் படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனப் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in