ஒரே அறையில் இரண்டு வெஸ்டன் கழிப்பிடங்கள்: அதிர்ச்சி அடைய வைத்த ஒப்பந்ததாரரின் அடடே கைவண்ணம்!

ஒரே அறையில் இரண்டு வெஸ்டன் கழிப்பிடங்கள்: அதிர்ச்சி அடைய வைத்த ஒப்பந்ததாரரின் அடடே கைவண்ணம்!

ஒரே அறையில் இரண்டு வெஸ்டன் கழிப்பிடத்தை அமைத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இருசக்கர வாகனம் மற்றும் அடிபம்போடு சேர்த்து சிமென்ட் சாலை, வாகனங்களுடன் சேர்த்து தார்ச்சாலை, கால்வாய்க்கு நடுவில் மின்கம்பம் என அடுத்தடுத்து ஒப்பந்தக்காரர்களின் சர்ச்சையான பணிகள் அதிர்ச்சியை கிளப்பின. கோவையில் ஒரே அறையில் இரண்டு கழிப்பிடம் அமைத்தது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல காஞ்சிபுரத்தில் ஒரே அறையில் இரண்டு மேற்கத்திய வகை கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை, திட்ட அலுவலர் கவிதா மற்றும் உள்ளாட்சி பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி இந்த கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தனர். புதிதாகக் கட்டப்பட்ட இந்த திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில் இரண்டுபேர் மறைவு இல்லாமல் அருகருகே அமரும் வகையில் கழிப்பிடம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in