பொதுமக்களின் புகார்களுக்கு வீடுகளுக்கே சென்று விசாரணை: குமரி காவல்துறை அசத்தல்

பொதுமக்களின் புகார்களுக்கு வீடுகளுக்கே சென்று விசாரணை: குமரி காவல்துறை அசத்தல்

பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு காவல் நிலையங்களுக்கு அவர்களை அழைத்து விசாரணை மேற்கொள்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்கள் புகார்தாரர்களின் இல்லங்களுக்கே சென்று விசாரணை மேற்கொள்ளும் நன்முயற்சி நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான புகார் மனுக்கள் விசாரணைக்கு நிலுவையில் இருந்தன. அதன் விசாரணையை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது அச்சமற்ற சூழலை உருவாக்கும் வகையில் குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் ஒரு நல்லமுயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி, தினசரி மாலை நேரங்களில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் புகார் மனு அளித்தவரின் இல்லங்களுக்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் புகார் மனுக்கள் மீது நேர்மையான முறையில் விசாரணை நடைபெறுவதுடன், பொதுமக்கள் காவலர்கள் இடையேயான நல்லுறவும் மேம்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வும் அதிகரிப்பதாக மக்களும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in