வீடு, வீடாகச் சென்று போதை மாத்திரை விற்பனை: போலீஸிடம் சிக்கிய ஸோமோட்டோ ஊழியர்

வீடு, வீடாகச் சென்று போதை மாத்திரை விற்பனை: போலீஸிடம் சிக்கிய ஸோமோட்டோ ஊழியர்

சென்னையில் வீடு, வீடாகச் சென்று போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஸோமோட்டோ ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஸோமோட்டோ ஊழியர் வீடு, வீடாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்பாக்கம் துணை ஆணையரின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு போதை மாத்திரை வேண்டுமெனக் கேட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் போதை மாத்திரைகளை எடுத்து வந்த போது போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சென்னை அரும்பாக்கம் எம்எம்டி.ஏ காலனியைச் சேர்ந்த முனியசாமி(20) என்பது தெரியவந்தது. இவர் ஸோமோட்டோவில் டெலிவரி பாயாக பணியாற்றுவது தெரியவந்தது. மேலும், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது போதை மாத்திரைகளை வீட்டுககுச் சென்று டெலிவரி செய்தால் அதிக அளவு பணம் கொடுப்பதாக முனியசாமி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு போதை மாத்திரைகளை வீடு, வீடாகச் சென்று விற்பனை செய்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த 610 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததுடன் ராஜிவைத் தேடி வருகின்றனர்,

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in