சிறுமியிடம் இனிமேல் பேசக்கூடாது: கடத்தப்பட்ட வாலிபரை அறையில் பூட்டி வைத்து கொல்ல முயன்ற கும்பல்

படுகாயமடைந்த ஹபீத்
படுகாயமடைந்த ஹபீத்

17 வயது சிறுமியிடம் பழகியதற்காக இளைஞரைக் கடத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகாவில் உள்ள கல்லுகுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹபீத்(20). இவருக்கும் வேறு மதத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் சமூக வலைதளம் மூலம் ஓர் ஆண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர்கள் நண்பராகியுள்ளனர்.

இந்த நிலையில், அந்த சிறுமியைச் சந்திக்க நேற்று முன்தினம் இரவு ஹபீத் வந்தார். அவர்கள் இருவரும் பேருந்து நிறுத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 12 பேர் கொண்ட கும்பல், ஹபீத்தைக் கடத்திச் சென்றது.

அங்கே அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஹபீத்தை அக்கும்பல் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் அவருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மீண்டும் அந்த சிறுமியை சந்திக்கக்கூடாது என மிரட்டிய ஒரு வாலிபர் கத்தியால் ஹபீத்தை குத்த முயன்துள்ளார். இந்த நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் ஹபீத் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சுப்ரமணிய போலீஸார். ஹபீத்தைத் தாக்கிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தனது மகளை ஹபீத் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்த 17 வயது சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், , “பஸ்ஸ்டாண்டில் இருந்தபோது என் மகளிடம் ஹபீத் தொலைபேசி எண்ணைக் கேட்டார். அதற்கு அவர் மறுத்ததால், மிரட்டி, மானபங்கம் செய்ய முயன்றார்" என்று கூறியுள்ளார். இதையடுத்து ஹபீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in