பேருந்தில் ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம்: நடத்துநர்களுக்கு அறிவுரை

மாநகர பேருந்து
மாநகர பேருந்துபேருந்தில் ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் - நடத்துனர்களுக்கு அறிவுரை

ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் மட்டுமே வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்பதால் பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘’ இந்திய ரிசர்வ் வங்கி 19-05-2023 தேதிய அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் சட்டப்பூர்வமான டெண்டராக இருக்கும். மேலும் செப்டம்பர் 30 ந் தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு நபர் ஒருவர் 20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் வரும் 23-05-2023 முதல் நடத்துநர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து வழிதடங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in