உணவில் கலக்கப்பட்ட விஷம்; கொத்துக்கொத்தாக உயிரிழந்த 50 நாய்கள்: மதுரையில் கொடூரம்

கொல்லப்பட்ட நாய்கள்
கொல்லப்பட்ட நாய்கள் உணவில் கலக்கப்பட்ட விஷம்; கொத்துக்கொத்தாக உயிரிழந்த 50 நாய்கள்: மதுரையில் கொடூரம்

மதுரையில் விஷம் கலந்து 50 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி, நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர் நாய்களின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழு நாய்களின் சடலங்களை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் நாய்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தனரா அல்லது கிராம புறப் பகுதிகளில் வெளி நபர்கள் யாரும் வலம் வருகின்றனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in