இறந்துபோன குட்டி... பல மணி நேரம் பாசப் போராட்டம் நடத்திய தாய் நாய்: கண்கலங்க வைத்த சம்பவம்

குட்டியை எழுப்ப முயலும் தாய் நாய்
குட்டியை எழுப்ப முயலும் தாய் நாய்

கொடைக்கானல் தாலுகா அலுவலகம் அருகே த‌ன‌து குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல், குட்டியை எழுப்ப‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் போராடிய தாய் நாயின் ப‌ரித‌விக்கும் காட்சிக‌ள் ச‌மூக‌ வளைத‌ல‌ங்க‌ளில் வைர‌லாகி வருகிறது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌ல் தாலுகா அலுவ‌ல‌க‌ம் அருகே உள்ள‌ புத‌ர் ப‌குதிக‌ளில் நாய் ஒன்று 5 குட்டிக‌ளை ஈன்றுள்ளது. க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ அந்த‌ குட்டிக‌ளுக்கு தொட‌ர்ந்து உணவளித்து வ‌ந்துள்ள‌ நிலையில், இன்று அந்த‌ நாய்க்குட்டிக‌ளில் ஒன்று இற‌ந்துள்ளது.

உயிரிழந்த குட்டி நாயுடன் தாய் நாய்
உயிரிழந்த குட்டி நாயுடன் தாய் நாய்

இத‌னிடையே, தனது குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் தாய் நாய் ப‌ல‌ வ‌ழிக‌ளில், பல ம‌ணி நேர‌ம் போராடி குட்டியை எழுப்ப முய‌ற்சி செய்த‌து. எனினும் முய‌ற்சி ப‌லிக்க‌வில்லை. த‌ற்போது, இந்த‌ தாய் நாயின் பாச‌ப்போராட்ட‌க் காட்சிக‌ள் ச‌மூக‌ வ‌லைத‌ல‌ங்க‌ளில் வைர‌லாகி ப‌ல‌ரின் க‌வ‌ன‌த்தை ஈர்த்துள்ள‌து. த‌ன‌து குட்டி இற‌ந்த‌துகூட‌ தெரியாம‌ல் குட்டியை எழுப்ப‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் போராடிய தாய் நாயின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in