ரன்வேயில் திரிந்த தெரு நாயால் அறிபறி... தரையிறங்க மறுத்து புறப்பட்ட ஊருக்கே திரும்பிய விமானம்

விஸ்தாரா விமானம்
விஸ்தாரா விமானம்
Updated on
1 min read

கோவா விமான நிலையத்தின் ஓடு பாதையில் தெரு நாய் ஒன்று திரிந்ததால், பெங்களூருவில் இருந்து வந்த விமானத்தை தரையிறக்க மறுத்த அதன் விமானி, மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பிச் சென்றார்.

பெங்களூருவில் இருந்து நேற்று மதியம் கோவா நோக்கிப் பறந்த விஸ்தாரா விமானம், ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு முன்னர் ஒரு சிக்கலை எதிர்கொண்டது. விமான நிலையத்தின் ஓடு பாதையில் தெரு நாய் ஒன்று சுற்றித்திரிவதால், சற்று நேரத்துக்கு வானிலேயே வட்டமடிக்குமாறு கோவா விமான நிலையத்தின் அதிகாரிகள் விமானியை கேட்டுக்கொண்டனர்.

தெரு நாய்
தெரு நாய்

ஆனால், விஸ்தாரா விமானத்தின் விமானி, தான் ஓட்டி வந்த விமானத்தை புறப்பட்ட இடமான பெங்களூருவுக்கே திருப்பிச் சென்றார். கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விஸ்தாரா யுகே 881 விமானம், மீண்டும் அது புறப்பட்ட பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றது.

இந்த வகையில் திங்கள் மதியம் 12.55 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து கோவா நோக்கி புறப்பட்ட விஸ்தாரா விமானம், அங்கே தரையிறங்காது பிற்பகல் 3.05 மணிக்கு பெங்களூருவுக்கே திரும்பியது. சிறிய இடைவேளைக்குப் பின்னர் பெங்களூருவில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாலை 6.15 மணிக்கு கோவா சென்றடைந்தது.

முன்னதாக ரன்வேயில் நாய் ஏதேனும் உலவுகிறதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே விமானி கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் தனது விமானத்தை தரையிறக்கினார். ”ரன்வேயில் நாய் ஒன்று தென்பட்டிருக்கிறது. எனவே சற்றுப்பொறுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். அதற்குள் விஸ்தாரா விமானி தனது விமானத்தை பெங்களூருவுக்கே திருப்பிச் சென்றார்” என கோவா விமானநிலைய அதிகாரிகள் குறைபடுகின்றனர்.

விஸ்தார விமான சேவை நிறுவனமோ, இந்த நிகழ்வை ’விமான நிலையத்தின் ஓடுபாதை கட்டுப்பாடு காரணமாக’ நேரிட்டதாக விளக்கம் அளித்துள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in