லிப்டிற்குள் சிறுவனைக் கடித்துக் குதறிய நாய்: திகிலூட்டும் வீடியோ வைரல்

லிப்டிற்குள் சிறுவனைக் கடித்துக் குதறிய நாய்: திகிலூட்டும் வீடியோ வைரல்

உத்தரப்பிரதேசத்தில் குடியிருப்பு வளாக லிப்டில் பள்ளிக்குச் செல்லும் சிறுவனை நாய் கடித்துக்குதறும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வளர்ப்பு நாய்களால் கடிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு வளர்ப்பு நாய்களால் கடிபடுபவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகும்.

அப்படி மீண்டும் ஒரு சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடைபெற்றுள்ளது. கிரேட்டர் நொய்டாவின் லா ரெசிடென்ஷியா குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள லிப்ட் வழியாக பள்ளி செல்வதற்காக ஒரு தாய் தனது மகனை அழைத்துச் செல்கிறார்.

அப்போது லிப்டில் நாயை ஒருவர் பிடித்துக் கொண்டு குச்சியோடு நிற்கிறார். லிப்ட் நிற்கவும், சிறுவனை அழைத்துக் கொண்டு தாய் வெளியே செல்ல முயற்சிக்கிறார். அப்போது திடீரென நாய் பாய்ந்து சிறுவனைக் கடித்துத் குதறியது. ஆனால், குச்சி வைத்திருப்பவர் எந்த சலனமும் இல்லாமல் நாய் சிறுவனைக் கடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.

நாய் கடித்ததால் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை @siddharth2596 என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in