தேர்வுக்கும், ஹிஜாப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை?

அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
தேர்வுக்கும், ஹிஜாப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை?

“தேர்வுக்கும், ஹிஜாப் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கு எந்த தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

கர்நாடகாவில் உள்ள கல்விக் கூடங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்தது. இது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதோடு, பல இடங்களில் வன்முறை வெடித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கர்நாடக அரசின் இந்த தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகளில் சிலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், தங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கர்நாடக அரசின் தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர கால மனுவாக விசாரிக்க கோரி மனுதாரர் சார்பில் ஆளுநரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் கோரிக்கை வைத்தார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவசர கால மனுவாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, தேர்வுக்கும் இந்தப் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியதோடு, இந்த வழக்கு எந்த தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in