அறுவை சிகிச்சைக்கு தயாரான மாணவி பதற்றம்; பாட்டுப் பாடி குஷிப்படுத்திய டாக்டர்: வைரல் வீடியோ

அறுவை சிகிச்சைக்கு தயாரான மாணவி பதற்றம்; பாட்டுப் பாடி குஷிப்படுத்திய டாக்டர்: வைரல் வீடியோ

கேரளத்தில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் பாட்டுப் பாடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கேரளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக பரோக் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர் முகமது ரெயீஸ் பாலக்கல் சிகிச்சைக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அறுவை சிகிச்சை அரங்கில் மயக்கவியல் மருத்துவர் வந்தபோது, அந்த மாணவி மிகுந்த பதற்றத்தில் இருப்பதை மருத்துவர் ரெயீஸ் பாலக்கல் பார்த்தார். உடனே அந்த மாணவியிடம், டென்ஷன் ஆக இருக்கிறதா? எனக் கேட்டார். உடனே அந்த மாணவி இல்லை என சொல்கிறார். அப்படி என்றால் ஒரு பாடல் பாடலாமா? என்றபடியே பாடச் சொல்கிறார்.

உடனே அந்த மாணவி, அறுவை சிகிச்சை படுக்கையில் இருந்தவாறே, கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘மலரே மெளனமா?’ என்னும் தமிழ் பாடலை பாடுகிறார். உடனே மருத்துவர் முகமது ரெயீஸ் பாலக்கலும் அதேபோல் பாடுகிறார். தமிழ் பாடலை இவர்கள் அச்சு, பிசகாமல் பாடுவதை அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in