ஒரே நாளில் சாதனை படைத்த சூர்யகுமார், கோலி: சச்சின், டிராவிட் எந்த இடம் தெரியுமா?

ஒரே நாளில் சாதனை படைத்த சூர்யகுமார், கோலி: சச்சின், டிராவிட் எந்த இடம் தெரியுமா?

நடப்பாண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் சூர்யகுமார். அதே நேரத்தில் சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய வீர சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்தாண்டில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 682 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு சதம், 6 அரை சதம் அடங்கும். இந்தாண்டு 20 போட்டிகள் விளையாடி உள்ளார் சூரியகுமார் யாதவ். நேபாளத்தின் தேவேந்திர சிங் ஹைரி, செக் குடியரசின் செபாவூதீன், பாகிஸ்தானின் முகமது மிஸ்பான், மேற்கிந்திய தீவின் நிக்கோலோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதனிடைய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இதுவரை 369 போட்டிகளில் விளையாடி உள்ள விராத் கோலி 16 ஆயிரத்து 4 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 262 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12,344 ரன்களும் 107 டி20 போட்டிகளில் 3,660 ரன்களும் விளாசியுள்ளார்.

முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18,436 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இருந்த டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார் கோலி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in