கல்லூரி மாணவர் தற்கொலை: உருக வைக்கும் காதல் பின்னணி

கல்லூரி மாணவர் தற்கொலை: உருக வைக்கும் காதல் பின்னணி

புதுவையில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவரான காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவர் வெளிநாட்டில் பணிசெய்து வருகிறார். இவரது மகன் ராதாகிருஷ்ணன் சாய்(19) கல்லூரி மாணவரான இவர், அதேபகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அந்த மாணவியின் சகோதருக்குத் தெரியவர, அவர் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனாலும் ராதாகிருஷ்ணன் சாயை தேடிவீட்டிற்கே சென்ற அந்த மாணவி தன் காதலை பிரேக் அப் செய்ய வேண்டாம் எனக் கேட்டுள்ளார். மீண்டும் இந்த விஷயம் மாணவியின் சகோதருக்குத் தெரிய பிரச்சினை வெடித்தது.

இந்நிலையில் அந்த மாணவி, தன் காதலன் ராதாகிருஷ்ணன் சாய் வீட்டிற்குச் சென்று ஒரு அறையில் தூக்குப்போட்டு சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த வருத்தத்திலேயே இருந்த ராதாகிருஷ்ணன் சாய் வீட்டில் யாரும் இல்லாத போது, தனிமையில் தூக்குப் போட்டு நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டார். காதல் கைகூட அண்ணன் தடையாக இருந்த விவகாரத்தில் காதலியும், காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in