நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகும் ‘செங்கோல்’: உயரம், எடை எவ்வளவு தெரியுமா?

ரகசியங்களை சொன்ன உம்மிடி சகோதரர்!
உம்மிடி சகோதரர்
உம்மிடி சகோதரர்

பாராளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் 5 அடி உயரமும், 1.5 முதல் 2 கிலோ எடையும், வெள்ளியில் செய்து தங்க முலாம் பூசப்பட்டது என உம்மிடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் திருவாவடுதுறையைச் சேர்ந்த செங்கோல் வைக்கப்பட உள்ளது. இந்த செங்கோலை ராஜாஜி கூறியதன் பேரில் திருவாவடுதுறை ஆதீனம் சென்னையை சேர்ந்த உம்மிடி சகோதரர்களிடம் செய்யச் சொல்லியுள்ளார். அதனை நேருவிடம் ராஜாஜி ஒப்படைத்துள்ளார்.

வரும் 28 ந் தேதி நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் இந்த செங்கோல் வைக்கப்படவுள்ள நிலையில், ஆதீனங்கள் மற்றும் உம்மிடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பிரதமர் மோடி கெளரவிக்கவுள்ளார். இதற்காக இன்று டெல்லி செல்லவுள்ள உம்மிடி பாலாஜி மற்றும் அவரது தந்தை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, ‘’1947ம் ஆண்டு நாடு விடுதலை அடைந்தவுடன், மூதறிஞர் ராஜாஜி கூறியதன் பேரில், திருவாவடுதுறை ஆதீனம் செங்கோல் செய்ய சொன்னார்.

இந்த செங்கோல் 5 அடி உயரமும், 1.5 முதல் 2 கிலோ எடையும், வெள்ளியில் தங்கம் முலாம் பூசப்பட்டதாகபூசப்பட்டதாகவும் இருக்கும். அந்த செங்கோல் செய்ய சுமார் ஒரு மாத காலமானது. 12 பேர் இணைந்து அதனை தயார் செய்தார்கள். அப்போது டெல்லிக்கு போகிறது என்பது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். இப்போது தான் அதன் வரலாறு தெரிகிறது.

75ஆண்டுகள் கழித்து இன்றைக்கும் அந்த வரலாறு திரும்பியுள்ளது. செங்கோல் என்பது நியாயம்,தர்மம்,நீதி உள்ளிட்டவைகளைக் குறிக்கும். அப்படிப்பட்ட நிகழ்வை மீண்டும் பார்க்க போகிறோம். இது நாட்டிற்கே பெருமையான விஷயம்.

இந்த செங்கோலை செய்வதற்காக 15 ஆயிரம் வாங்கினோம். இந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கவே 4 மாதங்கள் ஆகின. இந்த விழாவில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 15 நபர்கள் பங்கேற்கவுள்ளோம்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in