2 நாளில் டாஸ்மாக் கடையில் வசூல் எவ்வளவு தெரியுமா?

2 நாளில் டாஸ்மாக் கடையில் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு தொகை வசூலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடையில் வசூல் டார்கெட்டை நிர்ணயித்து விடுகிறது தமிழக அரசு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று எத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 464.21 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 22-ம் தேதி சென்னையில் 38.64 கோடியும், திருச்சியில் 41.36 கோடியும், சேலத்தில் 40.82 கோடியும், மதுரையில் 45.26 கோடியும், கோவையில் 39.34 கோடியும் என மொத்தமாக 205.42 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் 51.52 கோடியும், திருச்சியில் 50.66 கோடியும், சேலத்தில் 52.36 கோடியும், மதுரையில் 55.78 கோடியும், கோவையில் 48.47 கோடியும் என மொத்தமாக 258.79 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியன்று 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in