`இந்த 6 ஆன்லைன் லோன் செயலியை டவுண்லோடு செய்யாதீங்க'- டிஜிபி சைலேந்திரபாபு அலர்ட்

`இந்த 6 ஆன்லைன் லோன் செயலியை டவுண்லோடு செய்யாதீங்க'- டிஜிபி சைலேந்திரபாபு அலர்ட்

ஆன்லைன் லோன் செயலி மூலம் நடைபெறும் மோசடி குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் லோன் ஆப்பில் கடன் வாங்கிய பொதுமக்கள் பலர் பன்மடங்கு வட்டி செலுத்துவதுடன் மோசடியிலும் சிக்கி கொள்கின்றனர். இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடன் தருவதாக நினைத்து ஆன்லைன் லோன் ஆப்பை பொதுமக்கள் பலர் பதிவிறக்கம் செய்கின்றனர்.

செயலியை பதிவிறக்கம் செய்யும்போது செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளிக்கின்றனர். பின்னர் வாங்கிய கடனைவிட பல மடங்கு வட்டி கேட்டு அந்த கும்பல் மிரட்டி, அதன் பிறகு அவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பப்படும் என மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக euvalt, masen rupee, lory loan, wingo loan, cici loan, city loan என்ற லோன் செயலிகள் மோசடியில் ஈடுபடுவதாகவும், இதனை பொதுமக்கள் யாரும் டவுன்லோடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் பல ஆன்லைன் மோசடி செயலிகள் உருவாகி வருவதாகவும், அதை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in