எனக்கு கேன்சரா?: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா பரபரப்பு வீடியோ!

எனக்கு கேன்சரா?: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா பரபரப்பு வீடியோ!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சின்னத்தொடர் நடிகை ஹேமாவுக்கு கேன்சர் என்ற செய்தி வெளியான நிலையில் அதற்கு அவர் வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து நடிகை ஹேமா தனது யூடியூப் சேனலில் விளக்கமளித்து வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த சில மாதங்களாக கழுத்துப் பகுதியில் 4 செ.மீ அளவிற்குக் கட்டி ஒன்று இருந்துள்ளது. இது கேன்சர் கட்டியாக இருக்குமோ என எண்ணி மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து வந்தேன். இந்த பரிசோதனை முடிவு வெளியாக சில நாட்களான நிலையில் பயத்தில் தூக்கமில்லாமல் தவித்து வந்தேன்.

இதையடுத்து குடும்பத்தினருடன் ஆலோசனை செய்தபிறகு அந்த கட்டி அகற்ற முடிவு செய்து மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு வெற்றிக்கரமாக கட்டி அகற்றப்பட்டது. இந்த கட்டி சாதாரணமாக கட்டிதான் என்றும், பயப்படும்படி ஒன்றுமில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண்கள், தங்கள் உடல்நலனை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in