`எனக்கு இந்த செயின் வேண்டாம்; அந்த செயினை எடுங்கள்'- ஊழியரை திசைத்திருப்பி நகைகளை திருடிய திமுக பெண் நிர்வாகி

`எனக்கு இந்த செயின் வேண்டாம்; அந்த செயினை எடுங்கள்'- ஊழியரை திசைத்திருப்பி நகைகளை திருடிய திமுக பெண் நிர்வாகி

திருச்செந்தூர் நகைக்கடையில் தங்கநகையைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அதைத் திருடிவிட்டு கவரிங் செயினை வைத்துச் செல்லும் திமுக பெண் நிர்வாகியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

திருச்செந்தூரில் வடக்கு ரதவீதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு ஒரு பெண் வந்தார். அவர் தங்க செயின் பார்க்க வேண்டும் எனச் சொன்னதைத் தொடர்ந்து தன் கடையில் இருக்கும் பல மாடல் செயின்களையும் கடைக்காரர் எடுத்துக் காட்டினார். அப்போது தனக்கு இந்த மாடல் பிடிக்கவில்லை. வேறு மாடலை எடுத்துக்காட்டுங்கள் எனக் கூறியுள்ளார். கடை ஊழியர் திரும்பி நின்று வேறு மாடல் எடுக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி தன்னிடம் இருந்த கவரிங் செயினை வைத்துவிட்டு, நகைக்கடையில் இருந்த தங்கசெயினை எடுத்து தன் பர்ஸில் வைத்தார். தொடர்ந்து தனக்கு அந்த மாடல் பிடிக்கவில்லை என சென்றுவிட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே அந்தப்பெண் கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்ததில் அந்தப் பெண் அங்கமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த பொற்கொடி என்பதும், அவர் திமுகவில் எட்டாவது வட்ட செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. பொற்கொடி, தங்கநகையை தூக்கிக்கொண்டு கவரிங்கை வைக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நகைக்கடை தரப்பில் இருந்து வீடியோ வெளியானதால் பொற்கொடி புகார் கொடுக்க வேண்டாம். நகையைக் கொண்டுவந்து கொடுக்கிறேன் என சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in