அரசுப் பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

அரசுப் பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளிக்கு சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதற்காக பலரும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி சிறப்பு ரயில் குறித்த அறிவிப்புக்காக சிலர் காத்திருக்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

அந்த வகையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 22-ம் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம். டிஎன்எஸ்டிசி செயலி உள்ளிட்ட அரசு செயலி மற்றும் தனியாா் போக்குவரத்து செயலிகள் மற்றும் ஆன்லைன் வழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன. இன்று முன்பதிவு தொடங்கிய நிலையில், விரைவில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in