சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சிறப்பு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன், தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயிலை இன்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

இந்த சிறப்பு ரயில் வரும் 23-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகளை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

தனது கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயிலை விட்டதற்கு தெற்கு ரயில்வேக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in