தீபாவளி லீவு முடிந்தவர்கள் சென்னைக்கு ரிட்டர்ன்: அணிவகுக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி

தீபாவளி லீவு முடிந்தவர்கள் சென்னைக்கு ரிட்டர்ன்:  அணிவகுக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி திங்கள்கிழமையன்று வந்ததால் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடச் சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் வெளியூர்களுக்கு இதற்காக சுமார் 10 ஆயிரத்து 325 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு மீண்டும் படையெடுத்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் அரசு விடுமுறை அளித்ததால் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் திரும்பி வருகின்றனர்.

இதனால், சென்னை நகரத்தின் நுழைவுப் பகுதியான பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அன்றாடம் பணிக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து வாகன நெருக்கடியை சீர் செய்யும் பணியில் சமாளிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in