தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விடிய விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி தங்கள் ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக தமிழக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இன்று தீபாவளியையொட்டி, அதிகாலையிலேயே கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து சாமியை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பட்டாசு வெடிக்க தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதால் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசுகளை வெடித்து மக்கள் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடினர். மேலும் பட்டாசுகளை கவனமாக வெடிக்கும் படியும் தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினர் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in