கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்த மனைவி; பெற்ற மகளை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய பெற்றோர்: வைரலாகும் வீடியோ

கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்த மனைவி; பெற்ற மகளை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய பெற்றோர்: வைரலாகும் வீடியோ

கருத்து வேறுபாடால் கணவனைப் பிரிந்த தங்களது மகளை மரத்தில் கட்டி தொங்க விட்டு பெற்றோர் கொடூரமாக தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பழங்குடி இளம் பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் வீட்டிலிருந்து வெளியேறியவர், தன் வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் தவறாக நினைப்பார்களே என்று, தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.

இதுகுறித்த தகவலறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து கொடூரமாக தாக்கினர். அப்பெண்ணின் தந்தை, அவரது சகோதர்கள் ஒரு மரத்தில் அந்த பெண்ணைக் கட்டித் தொங்க விட்டு குச்சியால் தாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த இளம்பெண் கதறி அழுவதும், அவரை அடிப்பவர்கள் 'அழுவதை நிறுத்து. இனி எப்போதாவது இப்படி வருவாயா?' எனக்கேட்டுக் கொண்டே குச்சியால் தாக்குகின்றனர். இதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே ரசிக்கின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை அவரது சகோதரர்கள் உள்பட 4 பேர் மீது வழககுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்பி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in