காதல் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து; 2-வது திருமணத்துக்கு தடபுடல் ஏற்பாடு: தப்பியோடிய காதல் ஜோடி

போலீஸ் காதல் ஜோடி மற்றும் முதல் மனைவி சவிதா
போலீஸ் காதல் ஜோடி மற்றும் முதல் மனைவி சவிதாகாதல் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து; 2-வது திருமணத்துக்கு தடபுடல் ஏற்பாடு: தப்பியோடிய காதல் ஜோடி

காதல் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து பெற்ற கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த போது அதை தடுத்து நிறுத்தி இருக்கிறார் மனைவி. இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.

கோயிலில் இருந்து தப்பியோடிய காதல் ஜோடி
கோயிலில் இருந்து தப்பியோடிய காதல் ஜோடி

கடலூர் மாவட்டம், ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் சவிதா. இவர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராம்குமாரை என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றி வந்த ராம்குமார், தன்னுடன் பணியாற்றி வரும் ரம்யா என்ற பெண் காவலருடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் மனைவி இருக்கும்போது அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாக கூறி விவாகரத்து பெற்றிருக்கிறார் காவலர் ராம்குமார்.

ராம்குமார்- சவிதா
ராம்குமார்- சவிதா

இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டம், திருவேங்காட்டில் உள்ள ஸ்ரீசுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயிலில் காவலர் ராம்குமாருக்கும், ரம்யாவுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்கிறது. இது பற்றி தகவல் அறிந்த காதல் மனைவி சவிதா, தனது குடும்பத்துடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார். முதல் மனைவி சவிதாவிடம் சிக்கிக்கொண்ட காதல் ஜோடி அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே, மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சவிதா புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்த சீர்காழி காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

காதல் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து பெற்றுக்கொண்டு பெண் காவலர் ஒருவரை ஆண் காவலர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in