அரசு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த திருவாரூர் பெண் கலெக்டர்: பதறிப்போன பொதுமக்கள்

அரசு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த திருவாரூர் பெண் கலெக்டர்: பதறிப்போன பொதுமக்கள்
ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் ஆட்சியர் பங்கு பெறும் மக்கள் நேர்காணல் முகாம் திட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 248 பயனாளிகளுக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் பதறி போனார்கள். அருகாமையில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு நாற்காலியில் அமர வைத்தனர். சற்று நேரத்தில் அவர் ஆசுவாசம் அடைந்தார்.

அதன் பின்னர் அவரை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் அறிவுறுத்தியதையடுத்து பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, நிகழ்ச்சியின் பாதியிலேயே தனது முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் இப்படி மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in