ஒரே நாளில் 2 லட்சம் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் திருப்பதியில் விநியோகம்

ஒரே நாளில் 2 லட்சம் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் திருப்பதியில் விநியோகம்

திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட் மற்றும் இலவச தரிசன நேர டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று பகல் 1.30 மணி அளவில் முன்கூட்டியே சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுன்டர்கள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. தினமும் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஜன.11-ம் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்தந்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்படுவதால் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, அன்றைய தரிசனம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்குவதை நிறுத்தி அன்றே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in