அரைகுறை ஆடை அணியும் பெண்ணிடம் பாலியல் சீண்டல் தப்பில்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணி இடமாற்றம்

அரைகுறை ஆடை அணியும் பெண்ணிடம் பாலியல் சீண்டல் தப்பில்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணி இடமாற்றம்

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரைகுறை ஆடை அணியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தவறு இல்லை என சர்ச்சைத் தீர்ப்பு கொடுத்ததால் இவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் சந்திரன். கோழிக்கோட்டைச் சேர்ந்த இவர் கடந்த 2020 பிப்ரவரி 8-ம் தேதி நந்தி கடற்கரையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் எழுத்தாளர் ஒருவர் புகார்கொடுத்தார். இதில் கைது செய்யப்பட்டிருந்த சந்திரன், ஜாமீன் கோரி கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் கோழிக்கோடு அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் கடந்த 12-ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சந்திரனுக்கு 74 வயது ஆகிறது. அவர் மாற்றுத்திறனாளியும்கூட. அவரே பாலியல் சீண்டலில் ஈடுபடும் வாய்ப்பு குறைவு. புகார் கொடுத்திருக்கும் பெண் தன் உடல் உறுப்புகள் தெரியும்வகையில் அரைகுறை ஆடை அணிந்துள்ளார். இது பாலியல் உணர்ச்சியைத் தூண்டியுள்ளது. அரைகுறை ஆடை அணியும் பெண்ணிடம் பாலியல் சீண்டல் தப்பில்லை ”என சந்திரன் தீர்ப்பு கூறினார். இதேபோல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்திரனுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த வழக்கிலும், சந்திரன் சமூக நீதிக்காக எழுதுபவர். அவர் எப்படி இந்தச் செயலைச் செய்வார் என எதிர்கேள்விகேட்டு ஜாமீன் வழங்கினார்.

இதனிடையே இந்த சர்ச்சை தீர்ப்புகள் கேரளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணகுமார் கொல்லம், தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in