சில்மிஷம் செய்த இளைஞர்கள்; வீட்டு முன் அலறிய மனைவி: ஓடிவந்த கணவர் மீது கொடூரத் தாக்குதல்

சில்மிஷம் செய்த இளைஞர்கள்; வீட்டு முன் அலறிய மனைவி: ஓடிவந்த கணவர் மீது கொடூரத் தாக்குதல்

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வீட்டின் வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததைத் தட்டிக்கோட்ட அப்பெண்ணின் கணவனை தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் வாசலில் நின்றிருந்துள்ளார். அந்த வழியாக சென்ற இளைஞர்கள் இருவர் சுந்தரிடம் சில்மிஷம் செய்து கிண்டல் செய்துள்ளனர். இதனால் சுந்தரி கூச்சலிட்டுள்ளார். வீட்டின் உள்ளே இருந்து வந்த அவரது கணவர் ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அருகில் இருந்த ட்யூப் லைட் எடுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்தவர் அருகில் உள்ள கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏழுமலை, டில்லிபாபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in