தென்னந்தோப்புக்குள் மது குடிக்கும் போது தகராறு: டார்ச் லைட்டால் மனைவியைக் கொன்ற கணவன்

கொலை
கொலை

விருதுநகர் மாவட்டத்தில் மனைவியோடு சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கணவனே மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அத்திகோவில் பகுதியில் ஏராளமான தென்னந் தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தென்னந் தோப்பு ஒன்றில் வனராஜ் (30) என்பவர் காவலாளியாக வேலைசெய்து வந்தார். இவருக்கு உமா (28) என்ற பெண்ணோடு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரும் அதே தென்னந்தோப்பில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

வனராஜூம், உமாவும் சேர்ந்து அவ்வப்போது மது குடிப்பது வழக்கம். அந்தவகையில் நேற்றும் இருவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கோபம் அடைந்த வனராஜ், தோட்டக் காவலுக்கு வைத்திருந்த டார்ச் லைட்டால் தன் மனைவி உமாவைக் கொடூரமாகத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து கொலை செய்த வனராஜே கான்சாபுரம் வி.ஏ.ஓ நாராயணகுமாரிடம் சென்று நடந்தவற்றைச் சொன்னார். அவர் கூமாபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, போலீஸார் வழக்குப் பதிந்து வனராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in